ஆர்கே நகர் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆர்கே நகர் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் தினகரன் 7276 வாக்குகளும், அதிமுக 2738 வாக்குகளும், திமுக 1182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் தினகரன் முன்னிலையில் உள்ளார். இதனிடையே அதிமுக முகவர்களுக்கும் தினகரன் அணி முகவர்களுக்கும் இடையே கூச்சல் குழப்பம் நிலவியது.
தேர்தல் அலுவலர்களும் தாக்கப்பட்டனர். அதிமுக, தினகரன் அணியினர் மோதலால் மேஜைகள், மைக்குகள், நாற்காலிகளை தூக்கி போட்டு உடைத்தனர். அதிமுகவை சேர்ந்த பெண் ஏஜென்ட் உள்பட 4 பேர் வெளியேற்றப்பட்டனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையமே போர்க்களம் போல் காணப்படுவதால் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது இது போல் ரகளை நடந்துள்ளது.
As starting from the poll counting, TTV Dinakaran leading, Now ADMK and TTV factions are involved in word of war, so temporarily polling stops.