ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்.என். நம்பியாருக்கும், பி.எஸ். வீரப்பாவுக்கும் மக்கள் வாக்களிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியன இடையே கடும் போட்டி நிலவியது. ஒருவர் மாற்றி ஒருவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என பிரசாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் விரோத துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
எங்கள் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் காத்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக என்னை எம்.எல்.ஏவாக தேர்வு செய்துவிட்டனர்.
Dinakaran calls O.Panneer selvam and Edappadi Palanisamy as MN Nambiyar and Veerappa.