ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலம் சபாய் மதோப்பூரில் இருந்து லால்கோட் நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது அப்பேருந்து துபி என்ற இடத்தில் உள்ள ஆற்று பாலத்தை கடக்கும் போது தீடிரென்று ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்தது .இதனால் பேருந்து பாலத்தில் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது . இதில் பேருந்தில் பயணம் செய்த 20கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் .10கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் ஆற்றில் முழ்கியவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினரும் மீனவர்களும் மீட்டு வருகின்றனர் .பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜி உத்தரவிட்டுள்ளார்