முதல்வர், துணை முதல்வர் குறித்து துக்ளக் குருமூர்த்தி அநாகரீக டிவீட்...வீடியோ

Oneindia Tamil 2017-12-26

Views 1

தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் விமர்சனம் செய்திருப்பது அதிமுகவினரை மிகக் கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டெல்லிக்கும் அதிமுகவுக்கும் இடையே தூதராக செயல்பட்டு வருகிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி என்பது நாடறிந்த உண்மை. அதிமுக அமைச்சர்களே துக்ளக் குருமூர்த்தி வீட்டுக்கு பகிரங்கமாக சென்று ஆலோசனை நடத்தினர்.

இதற்கு தினகரன் தரப்பு மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் அதிரடியாக நேற்று நீக்கப்பட்டனர்.

இச்செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் துக்ளக் குருமூர்த்தி, முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து மிகவும் அநாகரீகமான வார்த்தைகளில் திடீரென விமர்சித்தும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு அதிமுகவினரை மிகக் கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.

துக்ளக் குருமூர்த்தியின் ட்விட்டர் பக்கத்திலேயே மிகக் கடுமையான விமர்சனங்களை அதிமுகவினர் பதிலுக்கு முன்வைத்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வரை இழிவாக விமர்சித்த துக்ளக் குருமூர்த்தியை கைது செய்ய வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்தியும் வருகின்றனர்.


A controversy has erupted over the Thuglak Editor S Gurumurthy's Tweet against Chief Ministr Edappadi Palanisamy and Deputy Chief Minister O Panneerselvam.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS