முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.
தினகரனின் ஆதரவாளர்களான அதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்பட 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வி.பி.கலையராஜன், பாப்புலர் முத்தையா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை நீக்கியுள்ளனர்.
5 பேரையும் நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்கு நீக்கப்பட்ட தங்கதமிழ் செல்வன் மற்றும் புகழேந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை தகாத வார்த்தைகளாலும், அவன் இவன் என்றும் மிக தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எட்டப்பாடி பழனிச்சாமி என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜீரோ பன்னீர்செல்வம் என்றும் அவர் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸும் அரசியல் அநாதைகள் என்றும் புகழேந்தி கடுமையாக விமர்சித்தார்.
TTV Dinakaran supporter Pugazhendi slams OPS and EPS. He said they are not deserve to terminate from party.