காலத்தின் கையில தான் இன்னும் இருக்கா தலைவா ?- வீடியோ

Filmibeat Tamil 2017-12-26

Views 589

கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்று ரஜினி கூறி 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ரஜினி அரசியலுக்கு எப்பொழுது வருவார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ளார். படங்களிலும் அவர் அரசியல் பற்றி பேசுவது இல்லை.
அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி ரஜினி நைசாக நழுவுவதாக பேச்சு உள்ளது. நழுவவில்லை அரசியல் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்துள்ளதால் தயங்குகிறேன் என்கிறார் ரஜினி.
முத்து படத்தில் வந்த ரங்கநாயகி பாடலில் கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்று பாடினார் ரஜினி. அவர் பாடி 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் காலத்தின் கையில் இருக்கு என்கிறார்.
மலடா அண்ணாமலடா என்று கூறி வாழ்கையில் சரசரவென முன்னேறியது போன்று நடித்த நீங்கள் அரசியலிலும் அதிரடியாக நுழைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
ரசியலுக்கு வா தலைவா, பார்த்துக்கலாம். நாங்கள் எல்லாரும் உன் பின்னால் இருக்கிறோம் என்று ரசிகர்கள் ரஜினிக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


Rajinikanth has met his fans on tuesday in Chennai. While fans expected him to announce about his political entry, he simply told that he will make an announcement on december 31st about his political stance.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS