ஆர் கே நகர் தேர்தலில் திமுக தோல்விக்கு காரணம் இதுதான்…வீடியோ

Oneindia Tamil 2017-12-26

Views 2.2K

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெப்பாசிட் கூட வாங்க முடியாமல் படு தோல்வியடைந்ததற்கான காரணம் திமுகவினரின் அலட்சிய போக்கில் வாக்காளர்களை சந்தித்தது என்ற உண்மை தெரியவந்துள்ளதால் தலைமை கழகம் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது,

நடைபெற்று முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக அதிமுக பாஜக சுயேட்சைகள் என்று 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெப்பாசிட் கூட வாங்காமல் படு தோல்வியடைந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் படு தோல்வியடைந்ததற்கு காரணம் குறித்து திமுக நிர்வாகிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஆர் கே நகர் பகுதியில் உள்ள திமுகவினர் அசால்டாக தேர்தல் பணிகளை செய்ததாகவும், வாக்காளர்களை அவர்கள் அலட்சியமாக சந்தித்து வாக்கு சேகரித்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அதிமுக உட்கட்சி பூசலினால் தினகரனுக்கும் மதுசூதனனுக்கும் ஆர்கே நகர் பகுதியில் மவுசு மங்கிவிட்டதாகவும் மருது கணேஷ் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அசால்டு நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றியதுடன் வாக்காளர்களை முறையாக சென்று சந்திக்க வில்லை என்பதும் தெரிந்துள்ளது. இது மட்டும் இன்றி திமுக வேட்பாளர்களை ஆதரித்து முறையான பிரச்சாரம் கூட செய்யப்பட வில்லை என்பதும் கூட்டணி கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையில் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் படு தோல்வியடைந்தது குறித்து விசாரணை நடத்த திமுக சட்டமன்ற கொறடாசக்கரபாணி, சட்டத்துறைசெயலர் கிரிராஜன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நேரில் விசாரணை நடத்தி வரும் 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Des : The fact that the DMK candidate Marudhunakash Despazit also failed to buy in the RK Nagar constituency is due to the fact that the DMK has suffered voter turnout and ordered the inquiry committee to conduct an inquiry,

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS