சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு அலுவலங்கள் மற்றும் நமது எம்ஜிஆர் ஜாஸ்சினிமா ஜெயாடிவி என்று 180க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று மீண்டும் சசிகலாவின் உறவினரான இளவரசியின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் மீண்டும் இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயாடிவி நமது எம்ஜிஆர் ஜாஸ்சினிமா இளவரசி வீடு திவாகரன் வீடு, கல்லூரி என்று சசிகலாவின் உறவினர் நண்பர்களின் வீடுகள் அலுவலகங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமானவரித்துறை அதிகாரிகள் 300க்கும் மேற்பட்டோர் பல குழுக்களாக பிரிந்து 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இச்சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் உறவினரான இளவரசியின் நண்பர்கள் உறவினர்கள் வீடுகள் மிடாஸ் மது பான ஆலை, ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், ஸ்ரீசாய் கார்டன்ஸ் கோவையில் உள்ள கல்லூரி என்று 5க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் நீடிக்கும் இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
Des : In the past few days, income tax officials have searched for more than 180 places in Sasikala's relatives and friends house offices and our MGR jazzinima jayativi. Yesterday, Sasikala's relative's relatives, friends and relatives, have been tested again for six days in six locations.