முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை விளாசிய அதிமுக எம்.பி- வீடியோ

Oneindia Tamil 2017-12-28

Views 5

முத்தலாக் கூறுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.பி. அன்வர் ராஜா, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து லோக்சபாவில் பேசினார்.
முத்தலாக் மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில் இன்று அறிமுகம் செய்தது. இதன் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

லோக்சபாவில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பேசுகையில், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அன்வர் ராஜா பேசியதாவது: இஸ்லாம் பெண்களுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. யாரோ போராடி முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வாங்கித்தரும் நிலையில் அந்த பெண்கள் கிடையாது.

எந்த சமூக மாற்றங்கள் என்றாலும் அதே சமூகத்தினரிடமிருந்தே வர வேண்டும். உதாரணத்திற்கு, தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் தீமைகளை நமது முன்னோர்கள் சிந்தித்தார்கள். அதன் விளைவாக அந்த வழக்கங்களை நீக்கும் முயற்சியை அதே சமூகம்தான் முன் எடுத்தது. எனவே அது வெற்றி பெற்றுள்ளது.

AIADMK Party MP Anwar Raja spoke in Lok Sabha against BJP government over Triple Talaq issue. Questions “if the husband is jailed, who will be taking care of the family?”

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS