ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே 2008ஆம் ஆண்டு முதல்வராக டிடிவி தினகரன் சதித்திட்டம் போட்டார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டம் வாரியாக நடத்தி வருகின்றது. இந்நிலையில் 29வது மாவட்டமாக உதகையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். ஏராளமான தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
உதகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும் டிடிவி தினகரனையும் ஓ.பன்னீர்செல்வம் வறுதெடுத்தார்.
தன்னை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தது தான்தான் என டிடிவி தினகரன் தெரிவித்து வருவது பொய் என்றும் ஓபிஎஸ் கூறினார். மேலும் தினகரன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களையும் ஓபிஎஸ் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
Deputy Chief mnister O Paneerselvam says TTV Dinakaran tried to be Chief minister of Tamilnadu on2008 when Jayalalitha was alive. OPS said this in MGR century function