தமது அரசியல் வருகைக்கு உதவ வேண்டும் என சென்னையில் பத்திரிகையாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள ரஜினிகாந்த் விரைவில் கட்சியின் பெயரை வெளியிட இருக்கிறார். இதனிடையே ரஜினிகாந்த் பேசிய ஆன்மீக அரசியல் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தமிழகத்தில் பாஜகவின் முகமாகத்தான் ரஜினி செயல்படுகிறார் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யாரையும் விமர்சிக்காமல், போராடாமல் ஆட்சியை பிடிப்போம் என்றெல்லாம் ரஜினிகாந்த் பேசியதும் சர்ச்சையாகிவிட்டது.
ஊடகங்களில் தற்போது விவாதப் பொருளாகி இருக்கும் ரஜினிகாந்த் இன்று சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் பேசியதாவது:
நானும் பத்திரிகையில் ப்ரூப் ரீடராக 2 மாதம் வேலை பார்த்திருக்கிறேன். எனது அரசியல் வருகைக்கு பத்திரிகையாளர்கள் உதவி தேவை. நான் தவறு ஏதேனும் செய்திருந்தால் நீங்கள் மன்னிக்க வேண்டும்.
மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன. சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மகாத்மா காந்தி தம்முடைய அரை ஆடையை தமிழகத்தில்தான் அணிந்து கொண்டார்.
சுதந்திரப் போராட்டம் போல மற்றொரு புரட்சிக்கு நாங்கள் தயாராக உள்ளோம். நான் இங்கே அரசியல் புரட்சியை நடத்த விரும்புகிறேன். இப்பொழுது மாற்றம் ஏற்பட்டால்தான் எதிர்கால தலைமுறையினர் நன்றாக வாழ முடியும்.
Rajinikanth said that, Tamil Nadu has been historically been a place of major political happenings. I too want to create a political revolution. If there is a change now, future generations will live better".