மீண்டும் விஜய்-62 படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ

Filmibeat Tamil 2018-01-02

Views 3.7K

விஜய் - முருகதாஸ் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் 'விஜய் 62'. இவர்கள் சேர்ந்து எடுத்த 'துப்பாக்கி', 'கத்தி' போன்ற படங்கள் மாஸ் ஹிட்டானவை. தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி அமைக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என்று தகவல்கள் வந்தது. இந்த நிலையில், படக்குழுவினர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் விஜய் 62 படத்திற்கு இசையமைக்கிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
விஜய் நடிக்க, அட்லி இயக்கிய 'மெர்சல்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி' ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கவிருக்கிறார்.

Vijay's new movie has been directed by A.R Murugadoss.. This is the third time this duo is working together. Previously they have worked together in the movie Thuppaki and kathi which were both big success. Kirthi suresh has been expected to play the female lead opposite Vijay. A R Rahman is the music director. The movie's shooting will commence on the last week of january or at the first week of febuary.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS