சூப்பர் டீலக்ஸ் படம் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிறது- வீடியோ

Filmibeat Tamil 2018-01-04

Views 7K

சூப்பர் டீலக்ஸ் டீஸரை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆரண்ய காண்டம் படம் மூலம் புகழ்பெற்ற தியாகராஜன் குமாரராஜா 6 ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார். சமந்தா, வேலைக்காரன் வில்லன் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமந்தாவின் கதாபாத்திரமான வேம்புவை அறிமுகம் செய்ய ஒரு டீஸரை வெளியிட்டார் தியாகராஜன் குமாரராஜா. இத்தனை ஆண்டுகளாக ஹீரோவை பார்த்து சிரித்து டூயட் மட்டுமே பாடிய சமந்தா சூப்பர் டீலக்ஸில் கத்தியை வைத்து கழுத்தறுக்கும் காட்சியில் நடித்துள்ளார். நல்ல முன்னேற்றம் சம்மு. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற குமரராஜா மீண்டும் அதே ஃபார்மில் திரும்பி வந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இது பற்றி தான் பேச்சாகக் கிடக்கிறது. வந்துட்டான்யா என் தலைவன் குமாரராஜா வந்துட்டான்யா என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சூப்பர் டீலக்ஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் ரசிகர்கள். விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி, யுவன் ஷங்கர் ராஜா என்று படக்குழுவின் பெயர்கள் அடங்கிய விக்கிபீடியா பக்கத்தை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

The new movie teaser of Super Deluxe is trending on social media currently. It has been directed by the acclaimed director thyagarajan kumara raja who has won national award o his first ever directorial debut "aranya gaandam".
samantha, fahath fazul are also being cast in the movie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS