நீதிபதி ஆறுமுகசாமியிடமே கேள்வி கேட்கும் சசிகலா- வீடியோ

Oneindia Tamil 2018-01-05

Views 11.6K

ஜெயலலிதா மரண வழக்கில் என் மீது புகார் கொடுத்தவர்கள் யாரென்று கூறினால் மட்டுமே நீங்கள் அனுப்பிய சம்மனுக்கு என்னால் பதில் அனுப்ப முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா கட் அன்ட் ரைட்டாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள், எதிர்க்கட்சியினர் புகார் கூறினர்.இதனால் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவருக்கென எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விவரங்களை பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தீபா, மாதவன், திமுக மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பிற மருத்துவர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகனராவ் உள்ளிட்டோரை ஆறுமுகசாமி விசாரணைக்கு அழைத்திருந்தார். இவர்களில் ஷீலா பாலகிருஷ்ணனையும், டாக்டர் பாலாஜியையும் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Sasikala has asked Arumugasamy Commission that who have given complaint against her, then only she will reply for commission's summon.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS