தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தினகரன் பங்கேற்று இருக்கிறார். அவர் முதல்முறையாக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் காலை தொடங்கி இருக்கிறது. ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் ஆகும் இது.
அதேபோல் ஆர்.கே நகர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கும் இதுதான் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகும்.
சட்டசபையில் தினகரனுக்கு 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 18 எம்.எல் .ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த இருக்கைகள் காலியாக இருக்கிறது.
First Session of the Tamil Nadu Legislative Assembly starts today. Governor Panwari Lal Purohit inaugurates the assembly. Dinakaran participated in First Session of the TN Legislative Assembly. He got the seat number 148.