நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தியுள்ளனர். கலை நிகழ்ச்சி தவிர்த்து நடிகர்கள் இடையேயான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டிகளில் நடிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். ஆர்யா மற்றும் அதர்வா தலைமையிலான அணிகள் மோதிய கால்பந்தாட்டப் போட்டி நடந்தது. அப்போது அதர்வா அணியை சேர்ந்த நடிகர் ஆரி கோல் போட முயன்றார். ஆர்யா அணியை சேர்ந்த ஒருவர் ஆரியை தடுக்க முயன்றபோது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஆரி. மருத்துவமனையில் ஆரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது நலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலேசியா சென்ற இடத்தில் ஜெயம் ரவிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜெயம் ரவிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விழா நடத்த சென்ற இடத்தில் இப்படியாகிவிட்டதே என்று பிரபலங்கள் வருத்தப்பட்டனர்.
Actor Jayam Ravi and Aari has been admitted in the hospital. All the actors have gone to malaysia to attend the celebrity festival. Aari got injured during the game. Jayam Ravi was also admitted in the hospital due to high fever.