தமிழக சட்டபேரவையில் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்ட தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது .தமிழகத்தில் ஆட்சிநிலை சரி இல்லை என்று கூறி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்
2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது .தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் துவங்கிய கூட்ட தொடரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ,தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆர் கே நகரில் சுயட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் மற்றும் சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற துவங்கிய போது எதிர்க்கட்சிகளான திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர் . அப்போது அவர்களை இருக்கையில் அமர ஆளுநர் அறிவுறுத்தினார் இருப்பினும் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர் .பின்னர் தனது உரையை தொடர்ந்த ஆளுநர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார்
Des : The first meeting of this year began with the Governor's address in the Tamil Nadu Legislative Assembly. Opposition, including the DMK, walked out of the seat saying that the regime was not right.