தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும் நடிகர் பாக்கியராஜ் விருப்பம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-08

Views 3


எதிரிகளாக இருந்த ஒபிஎஸ் இபிஎஸ் ஒன்றிணைந்த போது ஏன் தினகரன் ஒன்றிணைய முடியாது என்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் கேள்வி எழுப்பிள்ளார். மதுரையில் மனைவி பூர்ணிமாவுடன் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் தனது ரசிகர்மன்றத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பேசிய அவர் அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்றே இனிமேலும் இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றார். சினிமா பிரபலங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்று சொல்வதற்கு யாரும் உரிமை இல்லை என்றும், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் சினிமாவில் இருக்கும் போது மக்களுக்காக என்ன செய்துள்ளனர் என்பது முக்கியம் என்று கூறினார். மேலும் அதிமுகவில் பிளவுபட்டு எதிரிகளாக இருந்த ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்துள்ள போது ஏன் தினகரன் மீண்டும் அதிமுகவில் இணையக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Des : Bhakiraj, the film actor and director, asked why Dinakaran can not be united when Opposite UPS was united.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS