தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணியை 130 ரன்களிலேயே சுருட்டியது இந்தியா. இதன் மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றியை பெறும் முனைப்போடு இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தென் ஆப்பிரிக்க மண்ணிலேயே அந்த அணியை 2வது இன்னிங்சில் தெறிக்க விட்டுள்ளனர் இந்திய பந்து வீச்சாளர்கள். இதில் பல சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் இரு இன்னிங்சுகளிலும் பும்ரா பந்ததுவீச்சில் அவுட்டானார். பும்ராவுக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி என்பது சிறப்பு. டிவில்லியர்ஸ் இதற்கு முன்பாக 2 இன்னிங்சுகளிலும், ஒரே பவுலரால் அவுட் செய்யப்பட்டது 2015ல் மட்டுமே. மொகாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா பந்து வீச்சில் இரு இன்னிங்சுகளிலும் அவுட்டானார். அதன்பிறகு, பும்ரா அந்த தருணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக விருதிமான் சாஹா ஒரே டெஸ்ட் போட்டியில் 10 கேட்ச்கள் பிடித்து புது சாதனை படைத்துள்ளார். மோங்கியா, டோணி போன்ற இந்தியா கண்ட தலைசிறந்த டெஸ்ட் போட்டி, விக்கெட் கீப்பர்களாலும் முடியாத இந்த சாதனை இன்று சாஹாவால் நிறைவேறியுள்ளது. இதற்காக இந்திய அணியின் திறமையான வேகப் பந்து வீச்சுக்கும் பாராட்டு சேரும்.
India played amazingly well at the recent cricket match. and they won.