புதுச்சேரியில் 60 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற பூ வியாபாரி- வீடியோ

Oneindia Tamil 2018-01-09

Views 4

புதுச்சேரியில் 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த 30 வயது பூ வியாபாரி கைது செய்யப்பட்டார். புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மேரி ( 60). 4 மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ இறந்த நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மேரி மீண்டும் வீடு திரும்பவில்லை. கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேரியை தேடிவந்தனர். கடந்த 3ம் தேதி தென்னந்தோப்பில் தென்னை ஓலை குவியலில் அழுகிய நிலையில் மூதாட்டி மேரி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் மேரி கத்தியால் குத்தப்பட்டு, பிறகு, பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

வடக்குப்பகுதி போலீஸ் எஸ்பி ரச்சனாசிங் மேற்பார்வையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு அதிரப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட
சம்பவம் நடந்த தென்னந்தோப்பிற்கு கடந்த சில நாட்களில் யாரெல்லாம் போனார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பூ வியாபாரியான, பிரகாஷ்(30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து மடக்கி மடக்கி கேள்விகளை கேட்டு விசாரித்தபோது மூதாட்டியை பலாத்காரம் செய்து பிறகு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

A 30-year-old florist who was raped and murdered a 60-year-old woman in Puducherry, arrested. The police investigated about who had gone to coconut farm area last few days. They have suspicion on Prakash (30), a flower businessman.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS