ஏற்கனவே தயாரித்துள்ள நாணயங்களை வைக்க இடமில்லை என்பதால் புதிதாக நாணயங்களை தயாரிக்க வேண்டாம் என ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. கொல்கத்தா, மும்பை, நொய்டா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மத்திய அரசின் ஆலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நாணயங்களை தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் ஏற்கனவே தயாரித்த நாணயங்கள் ஆலைகளில் உள்ள அறைகளில் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிய நாணயங்களை தயாரித்தால் அவற்றை வைக்க இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக புதிதாக நாணயங்களை தயாரிக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பணி நேரத்தில் ஆலை ஊழியர்கள் பணி செய்தால் போதும் என்றும் ஓவர்டைம் பார்க்க வேண்டாம் என்றும் மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The four government mints in Kolkata, Mumbai, Noida and Hyderabad have stopped production of coins as lack of storage space.