1)போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை இரவு அறிவித்தனர். இதனால் வெள்ளிக்கிழமை (ஜன. 12) முதல் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வியாழக்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்த அறிவிப்பை இரவு 10 மணியளவில் வெளியிட்டனர்.போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு குறித்து கடந்த 4-ஆம் தேதி தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என தொமுச, சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டின. இதனால், அந்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து அரசின் ஆதரவு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை சமரசப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணும் மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2)தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இன்று பொங்கல் விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழகம் முழுக்க பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டார்கள்.3 மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-govt-announces-today-as-the-holiday-3-district-workers-308207.html
அடுத்த வாரம் நடக்க இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. சென்ற வருடம் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமே மெரினாவில் திரண்டது. மக்களின் அந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உலகமே திரும்பி பார்த்தது.
3) சிவகாசியில் 17-வது நாளாக நீடிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது குடும்பத்தோடு கடந்த 17-வது நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-will-inaugurate-jallikattu-alanganallur-308216.html
4) 3 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் விண்ணில் ஏவியது இஸ்ரோ.
100வது செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது.
பிஎஸ்எல்வி சி-15, பிஎஸ்எல்வி சி-34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
5)முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் கணிக்க முடியாத பேரிடர் ஏற்படும்பட்சத்தில் அதை பிரத்யேகமாக கையாளுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கான ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசும், தமிழகம், கேரளம் அரசுகளும் தனித் தனியாக குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.