உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும், வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, கடந்த வெள்ளிக்கிழமை செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகிய 4 சீனியர் நீதிபதிகள் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிபதிகள் இவ்வாறு நிருபர்களை சந்தித்து பேட்டியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக இப்பிரச்சினை தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியது. டிவி சேனல்களில் இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதுபற்றி அறிக்கை மூலம் விளக்கம் அளிப்பார் என சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதுபோல எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், டெல்லியில், இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா.
நீதித்துறையில் நிகழ்ந்த இந்த நிகழ்வுகளையடுத்து, இந்திய பார் கவுன்சில் இதில் தலையிட்டது. நாங்கள் சுமார் 15 மூத்த நீதிபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். எல்லோருமே, தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகள் நடுவேயான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
"Supreme Court matter resolved, courtrooms functioning normally, We met 15 SC judges and all have assured that issues have been resolved. Political parties should not try and take mileage from the incident,” says Manan Mishra, Chairman, Bar Council of India (BCI)