பிரபல தொலைக்காட்சி நடிகை சாரு ரொஹத்கி மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார்.

Filmibeat Tamil 2018-01-16

Views 1.5K

பிரபல தொலைக்காட்சி நடிகை சாரு ரொஹத்கி மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். பல ஆண்டுகளாக இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சாரு ரொஹத்கி. சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். உத்தரன், த்ரிதேவியான், பிரதிக்யா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். சாரு இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்த பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். சாரு இஷாக்சாதே படத்தில் பரினீத்தி சோப்ராவின் அம்மாவாக நடித்திருந்தார். சாரு இறந்த தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ள பரினீத்தி அவரை எப்பொழுதுமே மறக்க முடியாது என்று ஃபீல் செய்துள்ளார். சாரு திடீர் என்று மரணம் அடைய அவரின் வேலைப்பளுவே காரணம் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். காலை 3 மணி வரை ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் சாரு.

Famous Bollywood serial actress passed away due to heart attack today early mroning. She has acted in few serials and in a movie as pariniti chopra's mother. She was out shooting late and died in her shooting spot. A lot of celebrities have given their condolences on twitter.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS