ஆந்திராவில் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கூடியதால் கேட் ஏறி தப்பிச் சென்றுள்ளார் சூர்யா.

Filmibeat Tamil 2018-01-16

Views 12.1K

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானாவில் கேங் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
சூர்யா பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடாமல் ஆந்திராவில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். ஆந்திராவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மேனகா தியேட்டருக்கு சென்றார் சூர்யா. தியேட்டர் நிர்வாகமே எதிர்பாராத அளவுக்கு கட்டுக்கு அடங்கா கூட்டம் கூடிவிட்டது. ரசிகர்களின் கூட்டம் ஓவராக ஆனதால் வேறு வழியில்லாமல் சூர்யா தியேட்டரின் பின்பக்கம் உள்ள கேட்டில் ஏறிக் குதித்து சென்றுள்ளார். சாதாரண நபர் போன்று சூர்யா கேட்டில் ஏறிக் குதித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆந்திராவில் சூர்யா செல்லும் இடம் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. முன்னதாக அவர் தனது ரசிகர்களின் காலில் விழுந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya is currently touring in Andhra after his recent flick Gang is a hit there. Suriya was forced to climb the gate of Menaka Theatre in Rajamundry, to escape as huge crowd gathered there for him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS