கோல்டன் குளோப் விருது அமெரிக்க தமிழரான அஜீஸ் அன்சாரி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார்

Filmibeat Tamil 2018-01-17

Views 3K

கோல்டன் குளோப் விருது பெற்ற அமெரிக்க தமிழரான அஜீஸ் அன்சாரி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் மாஸ்டர் ஆஃப் நன் என்னும் தொலைக்காட்சி தொடரில் சிறப்பாக நடித்ததற்காக அமெரிக்க தமிழரான அஜீஸ் அன்சாரிக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 23 வயது புகைப்படக் கலைஞரான கிரேஸ்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்சாரி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அன்சாரி டேட் என்று கூறி என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டார். இது எனக்கு பிடிக்கவில்லை என்று ஜாடை மாடையாக கூறியும் அவர் கேட்கவில்லை. என் வாழ்க்கையின் மோசமான இரவு அது தான் என்று கிரேஸ் தெரிவித்துள்ளார். அன்று இரவு நடந்தது எல்லாமே சரியாக நடந்ததாகவே எனக்கு தோன்றியது. ஆனால் அந்த பெண்ணுக்கு அசவுகரியமாக இருந்தது என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்று அன்சாரி தெரிவித்துள்ளார்.

A 23-year old photographer has accused Golden Globe winner Aziz Ansari of sexually assaulting her. But Ansari said that they indulged in sexual activity with mutual consent.

Share This Video


Download

  
Report form