கடந்த ஆண்டின் சிறந்த இசை அமைப்பாளர்.

Filmibeat Tamil 2018-01-19

Views 1

தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் யார் என நமது தளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் வாக்களித்தனர்.
பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அனிருத் இசையமைத்த பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கடந்த ஆண்டில் பரவலான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிப்பது மட்டுமின்றி, குறிப்பிட்ட படத்திற்கு கிடைக்கப்பெறும் வரவேற்பிலும் கணிசமான பங்கு இசையமைப்பாளருக்கு உண்டு. படத்தின் ரிலீஸுக்கு முன்பு வெளியாகும் பாடல்களைப் பொறுத்தே படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது. இப்போதெல்லாம், பாடல்களை மொத்தமாக வெளியிடுவதை விட ஒவ்வொரு டிராக்காக வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.
ரசிகர்களுக்கு கியூரியாசிட்டி ஏற்றும் விதமாக அவ்வப்போது ஒவ்வொரு பாடல்களைப் பற்றிய அப்டேட்டுகளையும் வெளியிட்டு ஈர்க்கிறார்கள் படக்குழுவினர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பாடல்களும், பின்னணி இசையும் அமையவில்லையென்றால் அவ்வளவுதான். இத்தனையையும் கடந்து இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டியது தான் இன்றைய மியூசிக் டைரக்டர்களுக்கான சவால்.

Anirudh has been selected as the 'best music director 2017' based on the audience votes. Last year, Anirudh composed the music for 'Vivegam' and 'Velaikkaran'.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS