திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகபடும்படியாக சுற்றித்திரிந்த சேத்தூரான், கொம்பையன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கையில் இருந்த பையை சோதனை செய்த போது 10 ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை ரூபாயிலான கள்ள நோட்டுக்கள் அவர்களிடம் கட்டு கட்டாக இருந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுள்ளது தெரிய வந்தது. மேலும் அவர்களுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்த விக்னேஷ் மற்றும் தன்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Police have arrested and arrested four persons who have falsified counterfeit notes in festivals and public places.