உஷார் மக்களே...உங்களுக்கு இது போன்று போன்கால்கள் வருகிறதா?- வீடியோ

Oneindia Tamil 2018-01-22

Views 1

வங்கி அதிகாரிகள் போல் பேசி பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்ததால், அந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்த பரிதாப சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

தாசில்தாராக பணியாற்றுபவர் சேகர். இவரது தந்தை ராஜேந்திரன் ஓய்வுப்பெற்ற கருவூல அதிகாரியாகும். ராஜேந்திரன் தனது மனைவி ஜெயலட்சுமி (70)யுடன் சென்னை அண்ணா நகர் 4வது தெருவில் வசித்து வந்தார்.

ஜெயலட்சுமிக்கு இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உண்டு. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயலட்சுமிக்கு ஏதோ ஒரு செல்போன் நம்பரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.வங்கியிருந்து பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒருவர் ஜெயலட்சுமியிடம் பேசியுள்ளார். ஜெயலட்சுமியின் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாக கூறிய அந்த நபர், புதிய ஏடிஎம் கார்டை வங்கியிருந்து தர உள்ளதாகவும் ஏடிஎம் கார்டின் மீது உள்ள 16 இலக்க எண்களை கூறும்படியும் சொல்லியுள்ளார்.



Unknown persons were stolen Rs 90,000 from a Chennai woman's bank account who shares her account details with them. The victim dies due to heart attack after knowing the incident.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS