தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு, சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. நள்ளிரவுக்கு மேல் சரத் பிரபுவின் உடல் அவருடைய சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. சரத் பிரபு உடலுக்கு டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். ‘இனி இதுபோன்ற மரணம் நடைபெறாமல் நடவடிக்கை எடுப்போம்’ என்றார் அவர் .இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் சரத் பிரவு இறப்பு குறித்து விசாரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் ..
Tamil Nadu Deputy CM O Panneerselvam describes mysterious deth of doctor as unfortunate .