கர்நாடக முழுவதும் இன்று பந்த் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

Oneindia Tamil 2018-01-25

Views 2

கர்நாடக பந்த் காரணமாக, பெங்களூரிலுள்ள விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

கோவா மாநிலத்துடனான, மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெறுகிறது.

வாட்டாள் நாகராஜ் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இந்த பந்த்திற்கு, 2000த்துக்கும் அதிகமான கன்னட அமைப்புகள் ஆதரவு அளித்து களத்தில் குதித்துள்ளன.
பெங்களூரில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நகரில் பெருமளவில் அரசு பஸ்கள் இயங்கவில்லை என்பதால், ஆட்டோ, டாக்சியை நம்பியுள்ளனர் மக்கள்.

இந்த நிலையில், விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றிக்கொள்ள ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன. சில நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படுவதையும் பார்க்க முடிகிறது.

On account of the shutdown called by various organizations, Wipro Limited has declared holiday for employees in Karnataka tod

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS