அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. வசூலில் மாபெரும் சாதனை படைத்த 'மெர்சல்' திரைப்படம் இன்று நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது. மெர்சல் நூறாவது நாளைத் தொட்டதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது 'மெர்சல்'. தற்போது மெர்சல் 100-வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் CEO ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கும் 'மெர்சல்' படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தளபதி ரசிகர்கள் எங்களுக்கு ஒரு நினைவுகூரத்தக்க படமாக மெர்சலை உருவாக்கி இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். 'மெர்சல்' திரைப்படம் பொங்கல் அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சில மாதங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் மெர்சல் நூறாவது நாள் ஸ்பெஷலாக தியேட்டர்களில் திரையிடப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
'Mersal' starring Vijay, Samantha and Kajal Agarwal was released last year. 'Mersal' is a box office hit, has reached 100 days today. Hema Rukmini, CEO of Thenandal films thanked Vijay fans and 'Mersal' team on Twitter.