தமிழகத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை களமிறக்கி ஆதாயம் அடைய பாஜக திட்டமிடுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். ரஜினியுடன் இணைந்து தமிழக மக்களை மேம்படுத்தப் போவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரையில் சலசலப்புகள் தென்பட தொடங்கிவிட்டன.
பாஜக எதிர்ப்பு அரசியலில் திமுக தீவிரமாக இல்லையோ என மக்கள் நினைப்பதாலேயே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாசிட்டை அக்கட்சி இழந்தது. வலிமையான திராவிட அரசியல் தலைவர்கள் இல்லாத சூழலிலும் கூட பாஜகவால் இங்கே காலூன்ற முடியாத கலவர நிலைதான் இருக்கிறது.
இதனால்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசனை அரசியலில் களமிறக்கி அவர்களை முகமாக வைத்து ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. ரஜினிகாந்த் தமது பாதை ஆன்மீக அரசியல் என்கிறார். கமல்ஹாசனோ திராவிடம் என பேசிக் கொண்டிருக்கிறார்.
Actor Kamal Haasan said that he will join hands with Actor Rajinikanth who will float a new party.