குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 69வது குடியரசுத்தின விழா அனைத்து மாநிலங்களிலும் இன்று கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தினவிழாவில் ஆசியான் தலைவர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்து செல்லும் விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.
Republic day: Flights has been banned for 2 hours in Delhi. This has caused air traffic affected. Flights from Delhi to Chennai have been delayed.