அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரனின் வேலையை பாருங்க - ஓ.பி.எஸ்- வீடியோ

Oneindia Tamil 2018-01-26

Views 3K

அதிமுக கட்சிக்குள் சிண்டுமுடிந்து கபளீகரம் செய்து தினகரன் அழிக்கப்பார்ப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தினகரன் பற்றி எனக்கு நன்றாக தெரியும், பல ஆண்டுகளாக அவரின் குணம் எப்படி, செயல்பாடுகள் எப்படி அனைத்தும் எனக்கு தெரியும். அவர் நல்லவர் இல்லை. அதனால் தான் அவர் அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்தார். மன்னார்குடி குடும்பத்தின் இரும்பு பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்லகூடாது என்பதற்காக இணைந்து செயலாற்றி கொண்டிருக்கிறோம். 234 தொகுதிகளிலும் மக்களும் அதிமுகவின் பக்கம் தான் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டங்களே அதனை எடுத்து கூறுவதாக அவர் தெரிவித்தார்.

Dinakaran plans to destory ADMK says OPS. OPS said this in a function arranged by the party members at tambaram. And also he added that ADMK is peoples party and no one can dream of destorying it

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS