சென்னை அண்ணா சாலையில் 40 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம்.

Oneindia Tamil 2018-01-27

Views 150

அண்ணாசாலையில் 40 அடி நீளத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு நிலவுகிறது. சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இன்று சென்னை எழும்பூர் முதல் நேரு பூங்கா இடையே இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சுரங்க ரயில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.இந்நிலையில் அண்ணாசாலையில் 40 அடி நீளத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியயடைந்துள்னர். பள்ளம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாக ஆய்வு செய்யுமாறு மயிலாப்பூர் வட்டாட்சியருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வுக்குப் பிறகே பள்ளத்திற்கான காரணம் தெரியவரும் என மெட்ரோ ரயில் நிர்வாக பொது மேலாளர் அரவிந்த் ராய் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் அண்ணாசாலையில் இதேபோல் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Sudden groove at Chennai Annasalai. Chennai collector has ordered Mylapore thasildar to visit the place.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS