ஆப்கானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

Oneindia Tamil 2018-01-27

Views 444

ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 40பேர் உடல் சிதறி பலியான நிலையில், இதற்கு தலிபான்கள் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் போலீஸ் சோதனைச் சாவடியைக் குறிவைத்து இன்று மதியம் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற சோதனைச் சாவடியின் அருகில் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பல நாடுகளின் தூதரங்கள் உள்ளன.

இதுமட்டுமன்றி மருத்துவமனைகள் மற்றும் சொகுசு ஓட்டல்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள வெளிநாட்டவர்களை, குறிப்பாக அமெரிக்கர்களையும், அவர்களின் அலுவலங்களையும் தகர்க்கும் நோக்குடன் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் தலிபான்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

40 Killed and Over 100 Injured in a bomb blast in Afghanistan. The Bomb Hidden In Ambulance Goes Off Near Embassies In Kabul. Taliban terrorist suspected for the bomb blast

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS