திமுக போராட்டம் ஸ்தம்பித்தது தமிழகம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-30

Views 236


பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது .

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணம் உயர்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களும் கல்லூரி மாணவமாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே திமுக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்து .இந்நிலையில் பெயரளவிற்கே பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது என்றும் இதனால் தமிழகத்தில் அணைத்து மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட திமுக சார்பில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டு இன்று பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது .

திமுக எம் எல் ஏ அலுவலகத்தில் இருந்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் பேரணியாக புறப்பட்ட திமுகவினர் கொளத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் .பெரம்பூர் வழி செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதேபோல் சைதாப்பேட்டையில் திமுகவின் தோழமை கட்சிகளான மதிமுக தலைவர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் , மா சுப்ரமணியம் ஆகிறோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .தமிழக அரசு நூறுமடங்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தி பைசாவில் குறைப்பது ஏமாற்று வேலை என்றும் மக்கள் விரோத அரசு இனி நீக்க பட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்

இதேபோல் தமிழகத்தில் வேலூரில் எவ வேலு , திருச்சியில் கே என் நேரு , விழுப்புரத்தில் பொன்முடி, துரைமுருகன் காட்பாடியில் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்தனர் இந்த சாலை மறியல் போராட்டத்தால் தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது .

Des : The road rally was on behalf of DMK across Tamil Nadu, urging the cancellation of the bus fares.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS