உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியலில் குதிக்க என்ன காரணம் தெரியுமா?- வீடியோ

Oneindia Tamil 2018-01-30

Views 1

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியலில் குதித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதி ஸ்டாலின், தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டு, நயன்தாரா, ஹன்சிகா போன்ற முன்னணி கதாநாயகிகள், காமெடியன்களுடன் நடிக்க வைக்கப்பட்டபோதே, அவரை அரசியலுக்கு கொண்டுவர போடப்படும் அச்சாரம் இது என்ற கருத்தை அரசியல் விமர்சகர்கள் கூறினர். ஆனால், 10 படங்களை கூட தொடாத நிலையில், அவசரமாக அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளதுதான், விமர்சகர்கள் புருவங்களை உயர்த்தியுள்ளது.

திராவிட இயக்கங்கள் எப்போதுமே வெகுஜன ஊடகங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவை. பத்திரிகைகள், மேடை நாடகங்கள், திரைப்பட வசனங்கள் வழியாக திராவிட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தபடி இருந்தன. கருணாநிதி, தனது வசனங்களால் கட்சி கொள்கையை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தார். எம்ஜிஆர் பாடல்களில் அவை எதிரொலித்தன. ஸ்டாலினும் கூட சென்னை மேயராகும்முன்பு, சன் டிவி சீரியலில் நடித்துள்ளார்.

Why DMK Acting Chief MK Stalin's son and film actor Udayanidhi Stalin suddenly jumped in politics? here is the detail.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS