தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் மூடல்.. பல ஆயிரம் மக்கள் வேலை இன்றி தவிப்பு-Oneindia Tamil

Oneindia Tamil 2018-01-30

Views 2.8K

தமிழகத்தில் அடுத்தடுத்து மத்திய அரசு நிறுவனங்களை ஈவிரக்கமில்லாமல் பாஜக அரசு மூடி வருவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நாடு விடுதலை அடைந்த காலங்களில் மத்திய அரசின் பல நிறுவனங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறுவப்பட்டன. அதன்பின்னரும் மத்திய அரசு நிறுவனங்களை அமைக்க தமிழகம் போராடி வந்துள்ளது.

இப்படி 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் இயங்கி வரும் பல நிறுவனங்களை திடீர் திடீரென மத்திய அரசு மூடுவது அதிகரித்துள்ளது. கோவையில் இயங்கி வந்த மத்திய அரசின் அச்சகம் அண்மையில் மூடப்பட்டது.
அதேபோல் கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், சென்னையில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றையும் மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் சென்னையை அடுத்த ஆவடியில் 56 ஆண்டுகாலம் இயங்கி வந்த ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையையும் மூட இருக்கிறது மத்திய அரசு.

Several Institutions including Coimbatore Press which are run by the Central government in TamilNadu now closed.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS