ஒரே தேசம் ஒரே தேர்தல் முழக்கம்...நாடு முழுவதும் சட்டசபைகள் அதிரடி கலைப்பு?- வீடியோ

Oneindia Tamil 2018-01-31

Views 2

ஒரே தேசம்...ஒரே தேர்தல் என்ற புதிய முழக்கத்தை முன்வைத்துள்ள மத்திய அரசு நாடு முழுவதும் அதிரடியாக சட்டசபைகளை எந்த நேரத்திலும் கலைக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி ஆதாயம் அடையலாம் என்பது மத்திய பாஜக அரசின் வியூகம். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி 282 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக.

ஆனால் கடந்த 4 ஆண்டுகாலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதனையும் பாஜக நிறைவேற்றவில்லை. குறிப்பாக பாஜகவை நம்பிய கிராமப்புற வாக்காளர்களை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளும் வகையில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. நடுத்தர மக்களை நையப்புடைக்கும் வகையில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என அத்தனையையும் திணித்து பிழிந்துவிட்டது.

இதனால் கிராமப்புற, நடுத்தர மக்கள் மிகக் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனைத்தான் கடந்த 4 ஆண்டுகாலத்தில் 15 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த காலத்தில் பல மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்திருந்தாலும் ஆட்சியை பிடித்திருந்தாலும் அனைத்தும் நூலிழையிலும் வன்முறை வியூகத்தின் அடிப்படையிலும்தான் நடந்தேறியது.

Prime Minister Narendra Modi asked for a national debate on "One Nation One Poll". But Opposition parties have strongly rejected the idea of "One Nation One Poll".

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS