வானம் எனக்கொரு போதி மரம்.. இது நிழல்கள் படத்தில் வரும் பாடல் வரி.. இன்று மாலை வானில் ஒரு "நிழல் விளையாட்டு" அரங்கேறப் போகிறது. இந்தத் தலைமுறை மக்களுக்கு கிடைத்துள்ள மிக மிக அரிதான வானியல் நிகழ்வு என்பதால் உலகமே இதைக் காண ஆவலாக காத்துள்ளது. 31 ஜனவரி 2018 அன்று நிகழப் போகும் முழு சந்திர கிரகணம் குறித்து உலகமே பரபரப்பாக பேசி வருகிறது. சூப்பர் மூன் என்கிறார்கள், ப்ளூ மூன் - நீல நிலவு என்கிறார்கள். சிவந்த நிலா, தாமிர நிலவு என்கிறார்கள்.
152 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அதிசயம் என்கிறார்கள். என்னதான் நடக்கப் போகிறது அந்த நாளில். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விரிவான விளக்க கட்டுரை இதோ.
31 ஜனவரி 2018 அன்று நிலா உதிக்கும்போதே பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு உதிக்கும். அந்த சமயத்தில் சூரிய ஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. ஆனால் நமது வளிமண்டலத்தில் சிதறடிக்கப்படும் ஒளி நிலவின் மேல் படும். குறைந்த அலைநீளமுள்ள ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. எனவே தான் அது சிவப்பு நிலவாக தோன்றுகிறது
The whole world is talking about the Super Blue Red Moon 2018 which is to be held today evening. Here is the TNSF's simple explanation on the much awaited Lunar eclipse.