Union Budget 2018 | பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைகிறது!- வீடியோ

Oneindia Tamil 2018-02-01

Views 2K

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று நிதியமைச்சர் இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களின் கழுத்தை நெறிக்கிறது. இதற்கு ஓரளவு நிம்மதியளிக்கும் வகையில் பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை குறைத்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.பிராண்டட் அல்லாத பெட்ரோலுக்கு கலால் வரியாக லிட்டருக்கு ரூ. 6.48 வரை வசூலிக்கப்படுகிறது, இது ரூ. 4.48 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பிராண்டட் பெட்ரோலின் அடிப்படை கலால் வரியானழத லிட்டர் ரூ. 7.66 என்ற அளவில் உள்ளது ரூ.5.66 எஎன்ற குறைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பிராண்டட் அல்லாத டீசலின் அடிப்படை கலால் வரி லிட்டருக்கு ரூ. 8.33 வசூலிக்கப்படுகிறது, இது ரூ. 6.33 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிராண்டட் டீசல் மீதான வரி என்பது ரூ. 10.69ல் இருந்து ரூ. 8.69ஆக குறைந்துள்ளது.

பெட்ரோலின் விலையானது டெல்லி, மும்பை, பெங்களூரு, புனேவில் ரூ. 80ஐ தொட்டுள்ளது, சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.77 என்ற விலையில் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை, விநியோகம் இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் தினசரி பெட்ரோலியப் பொருட்களின் விலையில் மாற்றம் வருகிறது.

Some relief to middle class people in the Budget 2018 as excise duty cut by Rs. 2 for branded and unbranded Petrol and diesel as the prices were skyrocketing.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS