ஹைதராபாத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமானவருடன் பத்மாவத் திரைப்படம் பார்க்கப் போன இளம்பெண் தியேட்டரில் வைத்தே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் தியேட்டருக்குள் வைத்து 19 வயது இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன் 19 வயது பெண்ணும், இளைஞர் ஒருவரும் அறிமுகமாகியுள்ளனர்.
இரண்டு மாதமாக நட்பு நீடித்த நிலையில் பத்மாவத் திரைப்படம் பார்ப்பதற்காக தனது நண்பருடன் ஹைதராபாத் பிரசாந்த் திரையரங்கிற்கு சென்றுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தியேட்டரில் அதிக மக்கள் கூட்டம் இல்லாததை சாதகமாக்கிக் கொண்டு அந்த இளைஞர் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.