மூன்று பேரை மிதித்து கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டுள்ளது. நான்கு மயக்க ஊசிகள் செலுத்தி யானையை வனத்துறையினர் பிடித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதியில் சுற்றி திரியும் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாய் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று ஊருக்குள் அட்டகாசம் செய்து வருகிறது.
விளைநிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வரும் அந்த யானை மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒற்றை யானையால் கடந்த 3 நாட்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் நேற்று முன்தினம் தேவகுட்டப்பட்டியில் முனிராஜா என்பவர் உயிரிழந்தார். நேற்று சின்னாரில் ராஜப்பா என்பவரை ஒற்றை யானை மிதித்து கொன்றது.