ரஜினி கமல் கனவு பலிக்காது சீமான்- வீடியோ

Oneindia Tamil 2018-02-05

Views 170

நடிகர்களுக்கு வயதாகிய காலத்தில் சினிமாவில் மதிப்பை இழந்த உடன் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நிலைப்பாடு பலிக்காது என்றும் இவைகள் தேசிய இனத்தை அவமதிப்பதாக கருதுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான் திரைப்பட துறையில் கொடிகட்டி பறந்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டு வயதான காலத்தில் அரசியலில் ஈடுபடுவது தேவையற்றது என்றார். மஹாராஷ்டிராவை சேர்ந்த நடிகர் நானேபடேகர் அரசியலில் நுழைவதற்கு முன் திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளத்தை அப்படியே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார் என்றும் அப்படி இன்றைய சூழலில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைப்பது தேசிய இனத்தை அவர்கள் அவமதிப்பதாக தான் கருதுவதாகவும் சீமான் தெரிவித்தார்.

Des : Seeman said that the actors can not afford to be politically engaged in politics when they lose their respect of cinema in the age of age and that they are insulting the nation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS