ராஜாவுக்கு விருது இதுதான் காரணம்…வீடியோ

Oneindia Tamil 2018-02-05

Views 265

கங்கை அமரனை குளிரவைக்க தான் பாஜக இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உயரிய விருதுகளான பத்மஸ்ரீ , பத்ம விபூசன் , உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .இதன்படி 2017 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன அதில் இசை துறையில் பல்வேறு சாதனை புரிந்ததற்காக இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியுள்ளது . இந்த விருது இளையராஜாவுக்கு வழங்கியதன் பின்னணியில் கங்கை அமரன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கடந்த முறை ஆர் கே நகர் தேர்தலில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் நிறுத்தப்பட்டார் . கங்கை அமரனும் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று செலவுகளை செய்து வந்த நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .இதனை அடுத்து பலத்த கட்டுப்பாடுகள் உடன் மீண்டும் ஆர் கே நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மீண்டும் பாஜக சார்பில் கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்த்து இருந்த கங்கை அமரனுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக கரு நாகராஜ் நிறுத்தப்பட்டார் . இதனால் கடும் கோபத்தில் இருந்த கங்கை அமரனை குளிர்விக்கவே இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Des : It is reported that BJP candidate Ilayaraja has given Padma Vibhushan award to cool the Ganga

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS