முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவிஏற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு விழா கொண்டாடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் கடம்பூர் ராஜு குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு ஜெயலலிதா இறந்த பிறகு இந்த ஆட்சி களைந்து விடும் என பலர் நினைத்த நினையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் வரும் 14 தேதி ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில் மன்னர் காலத்தில் இருந்ததுபோல் குடிமரத்து பணிகள் விவசயிகளுக்கு பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்
மேலும் திமுக எப்போதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி ஆனால் அதிமுக அனைத்து மதமும் ஒன்றாக பார்க்கும் கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
Des : Minister Kadambur Raji said that the function will be held on the occasion of completing one year of Chief Minister Edappadi Palinasamy as Chief Minister.