தினகரனை கிண்டலடித்து ட்வீட் செய்த எஸ் வி சேகர்- வீடியோ

Oneindia Tamil 2018-02-06

Views 351

20 ரூபாய் நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை என எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இரட்டை இலை சின்னம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை, தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனது அணி குக்கர் சின்னத்தை பயன்படுத்தும் வகையில் தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.


SV Sekar slams TTV Dinakaran on the 20 rupees note issue in RK nagar. Chief election commission said that in Delhi high court that can not allocate cooker symbol to TTV Dinakaran.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS