ஜோசியம் பற்றி எனக்கு தெரியாது-ஓபிஎஸ்- வீடியோ

Oneindia Tamil 2018-02-06

Views 74

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் ஆட்சிக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள், இது பற்றி மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் எனக்கு ஜோசியம் பற்றி எதுவும் தெரியாது என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : கடந்த பிப்ரவரி 2ம் தேதி இரவு 10 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்புறம் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைந்திருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.இந்தத் தகவல் தெரிந்த உடனேயே மாவட்ட ஆட்சியர், கோவில் தக்கார், இணை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், வருவாய்த் துறையினர் என அனைவரும் விரைந்து செயல்பட்டனர். 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் துணையுடன் தீயணைப்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.


TN deputy CM O. Paneerselvam reviewed Madurai Meenakshi amman temple's fire caught area and asuured of safety measures in all world famous temples of Tamilnadu.

Share This Video


Download

  
Report form